ஐரோப்பா

பிரான்ஸிற்கு சுற்றுலா சென்ற 2 பெண்களுக்கு நேர்ந்த துயரம்!

பிரான்ஸில் சுற்றுலா சென்ற 2 பெண்கள் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸின் தென்மேற்கு நகரமான Sainte-Hélène (Gironde) இல் இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பிரான்ஸிற்கு சென்ற 21 வயதுடைய இரு இளம் பெண்கள், ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்துள்ளார்.

இந்த நிலையில், வீதியில் பயணித்த மற்றொரு ஸ்கூட்டருடன் மோதியுள்ளது.

D6 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இவ்விபத்தில், குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஸ்கூட்டரில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த நிலையில், பொலிஸாரால் சாரதி கைது செய்யப்பட்டார். அவர் மது போதையில் ஸ்கூட்டரைச் செலுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்