பொழுதுபோக்கு

தளபதிக்கு NO, தலைக்கு OK சொன்ன ட்ரெண்டிங் நடிகை… வருத்தத்தில் ரசிகர்கள்!

நடிகை ஸ்ரீலீலா விஜய் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாட மறுத்திருக்கிறார். அதேசமயம் அஜித்தின் புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தி கோட்’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறாமல் போனது.இதனால், அடுத்து வரக்கூடிய பாடல்களாவது கொண்டாட்டமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். விஜயின் பிறந்த நாளான ஜூன் மாதம் இரண்டாவது சிங்கிள் வரும் என இயக்குநர் வெங்கட்பிரபு அறிவித்திருக்கிறார்.

Why is Sreeleela planning a break from shoots? - Telugu News -  IndiaGlitz.com

இப்படியான சூழ்நிலையில்தான் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிகர் விஜயின் ‘தி கோட்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடிக்க மறுத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனது நடனம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஸ்ரீலீலா, தமிழில் படங்கள் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் விஜயின் ‘தி கோட்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், தமிழில் தன்னுடைய அறிமுகம் ஒரு பாடலில் இருக்க வேண்டாம் கதாநாயகியாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த ஸ்ரீலீலா இந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

SreeLeela Trends ™ (@TrendsSreeLeela) / X

அதே சமயத்தில் அவருக்கு வந்த மற்றொரு வாய்ப்புதான் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஹீரோயின் வாய்ப்பு. அதனால், அஜித் பட ஹீரோயின் வாய்ப்பை சந்தோஷமாக ஓகே சொல்லி இருக்கிறாராம் ஸ்ரீலீலா. விஜய்- ஸ்ரீலீலா நடனத்தை திரையில் பார்க்கலாம் என நினைத்திருந்த விஜய் ரசிகர்கள் இதனால் ஸ்ரீலீலா மீது வருத்தத்தில் உள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content