உலகம்

இந்தோனேசியாவில் காட்டுத்தீ – தேசியப் பேரிடரை அறிவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இல்லாத அளவுக்கு மிக மோசமான காட்டுத்தீயுடன் இந்தோனேசியா போராடி வருகிறது.

காட்டுத்தீ காரணமாக ஏற்பட்டுள்ள புகை வளிமாசடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது.

மேலும் இந்த காட்டுத்தீ காரணமாக சுமார் 900,000 ஹெக்டேர் நிலம் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அனர்த்த நிலைமை காரணமாக தேசியப் பேரிடரை அறிவித்து, நீர் குண்டு வீசும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரி, மத்திய கலிமந்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

நச்சுப் புகைமூட்டம், உடல்நலப் பிரச்சினைகளில் கடுமையான அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாகவும்,  ஏழு மாகாணங்களில் சுவாச நோய் பாதிப்புகள் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 280,000-ஐத் தாண்டியுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்