அறிவியல் & தொழில்நுட்பம்

கற்பனையை நிஜமாக்கிய மஸ்க் – பறக்கும் கார் அறிமுகம்

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், பறக்கக்கூடிய திறன் கொண்ட ஒரு காரை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

இத்தகைய அம்சம் நீண்டகாலமாக அறிவியல் புனைகதைகளிலும், குழந்தைகளுக்கான கார்ட்டூன் நிகழ்ச்சிகளிலும் மட்டுமே காணப்பட்டு வந்த நிலையில் தற்போது மஸ்க் அதனை நிஜமாக்கியுள்ளார்.

மஸ்க்கிற்குச் சொந்தமான மற்றொரு நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ (SpaceX)-ன் டெக்சாஸ் சோதனை மையத்தில் இதன் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது  புதிய ‘டெஸ்லா ரோட்ஸ்டர்’ (Tesla Roadster) கார் காட்சிப்படுத்தப்பட்டது.

இருவர் அமரக்கூடிய இந்த ஸ்போர்ட்ஸ் கார், ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் மணிக்கு 0 முதல் 60 மைல் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

மேலும், காரின் அடிப்பகுதியில் உள்ள உறிஞ்சும் விசையைப் (suction) பயன்படுத்தி, செங்குத்தான சரிவுப் பாதையில் ஏறி, தலைகீழாகத் தொங்கிக்கொண்டே, அங்கிருந்து காற்றில் குதித்து, ஏர் ஜெட் (air jets) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் தரையிறங்கும் காட்சியை மஸ்க் விளக்கிக் காட்டினார்.

இந்தச் சோதனையின் போது காரில் ஓட்டுநர் எவரும் இல்லை. “யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே” ஓட்டுநர் இன்றி இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக மஸ்க் பார்வையாளர்களிடம் தெரிவித்தார்.

“வெற்றி கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது,” என்று குறிப்பிட்ட அவர், “இது செயல்பட வாய்ப்புள்ளது, ஆனால் ஒருவேளை செயல்படவில்லை என்றாலும், நாங்கள் பாதுகாப்பான தூரத்தில் தான் இருக்கிறோம்,” என்று கூறினார்.

 

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்