ஐரோப்பா

ஈரானுக்கு ஆதரவு – நோர்வே பிரஜைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

ஈரானுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நோர்வே பிரஜைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜோஹன்னஸ் நாட்லாண்ட் Johannes Natland இளைஞருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஹடர்ஸ்ஃபீல்டில் உள்ள ஒரு விடுதியில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பொலிஸார் பறிமுதல் செய்திருந்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஸ்வீடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இருப்பினும் தனக்கு கொலை செய்யும் எண்ணம் இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜூலை மாதம் நடந்த மறுவிசாரணைக்குப் பிறகு அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்நது லண்டனின் வூல்விச் கிரவுன் நீதிமன்றத்தில் இன்று அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்