ஐரோப்பா

இங்கிலாந்தில் மீள்குடியேறியப்பின் முதல் பொது நிகழ்வில் கலந்துகொண்டார் சசெக்ஸ் கோமகன்

இங்கிலாந்து திரும்பிய பிறகு இளவரசர் ஹாரி, லண்டனில் நடைபெற்ற முதல் இன்விக்டஸ் ஸ்பிரிட் விருதுகள் விழாவில் கலந்துக்கொண்டுள்ளார்.

இதுவே அவர் இங்கிலாந்தில் முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய சந்தர்ப்பமாகும்.

ஏர்ல் ஸ்பென்சரின் புதிய நினைவுக் குறிப்பான ‘ஸ்வான் சாங்: டைரி, மை சிஸ்டர்’ (Swan Song: Diary, My Sister) என்ற புத்தகத்தில், இளவரசி டயானாவின் மரணம், மற்றும் பிற சர்ச்சைக் குரிய கருத்துக்கள் தொடர்பில் அவரிடம் இதன்போது கேட்கப்பட்டது.

இருப்பினும் சசெக்ஸ் கோமகன் இந்த சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.

அந்தப் புத்தகத்தில், வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணத்தைத் தொடர்ந்து மன்னர் சார்லஸ் உணர்ச்சியற்ற கருத்துக்களைத் தெரிவித்ததாக ஏர்ல் ஸ்பென்சர் குற்றம் சாட்டுகிறார்.

மேலும் மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் உள்ளிட்ட அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல், திட்டமிடப்பட்ட பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்