நாமலை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அன்றைய தினமே அவரது பிணை மனு மீதான தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் நீதவானின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ ஆகியோரின் சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பான விவகாரத்தில் 100 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




