தென்னிலங்கையில் பயங்கர துப்பாக்கிச் சூடு!! மூவர் உயிரிழப்பு, பலர் காயம்
காலி மற்றும் எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிட்டு சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளர். ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
காலி – எல்பிடிய, பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு காரணமாக ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் ஒருவரும் மேலும் இரு ஆண்களும் கல்லிந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அம்பலாங்கொடை கலகொட பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூவர் காயமடைந்து பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அம்பலாங்கொடை கலகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றினுள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.