செய்தி விளையாட்டு

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி
வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் மூன்று வீரர்கள் சதங்களைப் பதிவு செய்து அசத்தினர்.

தொடர்ந்து, 406 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கிப் பதிலடி கொடுத்த இந்திய அணி, 43.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டிப் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மற்றும் அணித்தலைவர் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர்.

ரோஹித் சர்மா 101 ரன்களையும், அணித்தலைவர் சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 223 ரன்களையும் குவித்தனர்.

முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துத் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 3-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

உலக சாதனை 

ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டைச் சதமடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் படைத்துள்ளார்.

கவுகாத்தியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 406 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா விரட்டியபோது, கில் வெறும் 117 பந்துகளில் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்து வரலாற்றுச் சாதனை நிகழ்த்தினார்.

இப்போட்டியில் அவர் ஆட்டமிழக்காது 133 பந்துகளுக்கு 223 ஓட்டங்களைக் குவித்தார்.

முன்னதாக 2022-இல் பங்களாதேஷிற்கு எதிராக 126 பந்துகளில் இரட்டைச் சதமடித்து இஷான் கிஷன் படைத்த சாதனையை, சுப்மன் கில் (117 பந்துகள்) தற்போது முறியடித்துள்ளார்.

ODI போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்தது மேற்கிந்திய தீவுகள் அணி

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி