குமாரபுரம் படுகொலை வழக்கை மீள் விசாரணை செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் ஆறு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 24 தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்ததாகவும், மேலும் 25 பேருக்குக் காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்களை விடுவித்து அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டைப் பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு […]













