இலங்கை செய்தி

திறைசேரி சம்பவம் – நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம் குறித்து ஆராய விசேட குழு 

  • May 1, 2026
  • 0 Comments

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை முன்னெடுப்பதற்காக சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, நான்கு சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திறைசேரியின் வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்தலின் போது, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாவது தரப்பினருக்கு கைமாறிய சம்பவம் தொடர்பாக, நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் […]

இலங்கை செய்தி

திறைசேரி டொலர் கொள்ளை சம்பவம் – நிதியமைச்சின் அதிகாரி தற்கொலை

  • April 30, 2026
  • 0 Comments

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் 04 அதிகாரிகளில் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் குளியாப்பிட்டியவில் உள்ள தமது வீட்டின் காணியொன்றில் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையக் குற்றவாளிகளால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், இவருடன் சேர்த்து நான்கு அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் […]

இலங்கை முக்கிய செய்திகள்

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயம்!

  • April 24, 2026
  • 0 Comments

இலங்கையின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் திறைசேரியால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் நம்பகமான தரப்பாக நடித்து, தவறான தகவல்களை அளித்து குறித்த பணத்தை  கொள்ளையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் பணத்தை மீட்க வேண்டியிருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மக்கள் மத்தியில்  […]