போதைப்பொருள் கடத்தல் – காவியை பயன்படுத்தியமைக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு
புத்தர் பெருமானின் புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான பிக்குகள் குழுவினரின் சாசன விரோத மற்றும் சட்டவிரோதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக மூன்று நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூட்டாக இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (25) […]




