ஜெர்மனிக்குக் கடத்தப்படவிருந்த 3,000-க்கும் மேற்பட்ட சிலந்திகள் பறிமுதல்
ஜெர்மனிக்குக் கடத்தப்படவிருந்த 3,000-க்கும் மேற்பட்ட டாரன்டுலா (tarantula) வகைச் சிலந்திகள் பெருவின் லிமா விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ஜெர்மனியைச் சேர்ந்த இருவர் மற்றும் போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான சுங்கச் சோதனையின்போது, அவர்கள் கொண்டுவந்திருந்த சூட்கேஸ்களுக்குள் ஏதோ ஒன்று அசையும் தன்மையுடன் இருப்பதை அவதானித்த அதிகாரிகள் அதனை சோதனை செய்தபோது […]




