ஐரோப்பா

ஜப்பானின் சொத்துக்களை உடமையாக்கிய புட்டின் – நிர்வாக உத்தரவில் கையெழுத்து

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜப்பான் டொபாக்கோ இன்டர்நேஷனல் (JTI) நிறுவனத்தின் ரஷ்ய சொத்துக்களை தற்காலிகமாகப் பறிமுதல் செய்வதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

தொடர்புடைய ஆணை நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

புட்டினின் இந்த நடவடிக்கைக்கு டோக்கியோ உடனடியாக கண்டங்களை தெரிவித்துள்ளது.

ஜப்பான் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்துவரும் சூழலில் இந்தவிடயம் உறவுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ஆணையின்படி, ஜப்பான் டொபாக்கோவின் (JT) ஒரு பகுதியாகவும், ரஷ்யாவின் மிகப்பெரிய புகையிலை உற்பத்தியாளராகவும் உள்ள JTI-யின் நான்கு வணிகங்களில் உள்ள பங்குகள், இனி ரஷ்ய நிறுவனமான இண்டஸ்ட்ரியல் அசெட்ஸ்-இன் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புட்டினின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் அவ் ஆணையில் குறிப்பிடப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்