மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு: யாழில் சோகம்
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அரச அலுவலகங்களுக்கு இடையே நடைபெறும் உற்பத்தித்திறன் போட்டியில் பங்கேற்பதற்காக, […]













