யாழ். வலி.வடக்கில் ஏப்ரலில் காணி விடுவிப்பு!
“ யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு தொகுதி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளன.” இவ்வாறு கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekar தெரிவித்தார். மக்களுடைய காணிகளை அவர்களிடமே மீள ஒப்படைக்க வேண்டும் என்பதில் தற்போதைய அரசு உறுதியான நிலைப் பாட்டில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். “ பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் காணிகள் படையினரின் வசமிருக்க வேண்டிய தேவை […]













