அரசியல் இலங்கை செய்தி

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த யாழ். சிறுவனின் இறுதிக்கிரியை தொடர்பான அறிவித்தல்!

  • February 12, 2026
  • 0 Comments

யாழில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியை இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. அல்லைப்பிட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த வேன்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வாகனத்தை ஓட்டிச் சென்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வாகனத்தில் பயணித்த மற்றுமொரு நபரும் சிறுவனின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டு, முன்னதாக எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இருவரையும் பிணையில் விடுவிக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் […]

உலகம்

பங்களாதேஷில் இன்று தேர்தல்: ஆயிரத்துக்கு மேற்பட்ட புது முகங்கள் களத்தில்!

  • February 12, 2026
  • 0 Comments

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பங்களாதேஷில் Bangladesh இன்று பொதுத்தேர்தல் general elections நடைபெறுகின்றது. அங்கு நடைபெறும் தேர்தல் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனம் திரும்பியுள்ளது. தேர்தலில் ஆயிரத்து 981 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 1,518 பேர் முதல் முறையாக களமிறங்கியுள்ளனர். 12.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இன்று காலை தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பங்களாதேஷில் கடந்த 2024-ல் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு […]

இலங்கை செய்தி

சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும்: ஜனாதிபதி உறுதி!

  • February 11, 2026
  • 0 Comments

“சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை. சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கAnura Kumara Dissanayake தெரிவித்தார். எனவே, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. 2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். நுவரெலியாவில் இன்று (11) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான […]

அரசியல் இலங்கை செய்தி

யாழில் நடந்த துப்பாக்கிச்சூடு: நீதியான விசாரணை தொடர்பில் சந்தேகம்!

  • February 11, 2026
  • 0 Comments

“குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமைதான் இந்த நாட்டில் காணப்படுகின்றது.” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Gajendrakumar Ponnambalam தெரிவித்தார். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிறுவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “போரற்ற சூழலில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வீதிகளில் சுதந்திரமாக நடமாட கூடிய சூழலில் வாகனத்தை நிறுத்தாமல் […]

இந்தியா

கனடாவில் துப்பாக்கிச்சூடு: இந்திய பிரதமர் இரங்கல்!

  • February 11, 2026
  • 0 Comments

கனடா பாடசாலைக்குள் நடத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “கனடாவில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த ஆழ்ந்த துக்க தருணத்தில் கனடா மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது.” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, […]

விளையாட்டு

பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆட்டம்: போராடி தோற்றது ஆப்கானிஸ்தான்!

  • February 11, 2026
  • 0 Comments

T 20 உலகக்கிண்ண தொடர்பில் இன்று நடைபெற்ற 13 ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் Afghanistan மற்றும் தென் ஆப்பிரிக்கா South Africa அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக Quinton de Kock 59 ஓட்டங்களையும், Ryan Rickelton 61 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். […]

இலங்கை செய்தி

மாறியது வரலாறு: தோட்டத் தொழிலாளர்களை நேரில் சென்று சந்தித்தார் ஜனாதிபதி!

  • February 11, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையக பெருந்தோட்டப் பகுதிக்குச் சென்று, தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது. தமக்குரிய சம்பள உயர்வு நேற்று கிடைக்கப்பெற்றதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையிலேயே அவர்களை ஜனாதிபதி இன்று நேரில் சந்தித்தார். முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நுவரெலியா சென்றார். அங்கு செல்லும் வழியிலேயே தொழிலாளர்களைச் சந்தித்து, […]

அரசியல் இலங்கை செய்தி

வலுவான எதிரணி மலரும்: ஐதேக நம்பிக்கை

  • February 11, 2026
  • 0 Comments

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்த பின்னர் வலுவானதொரு கூட்டு எதிரணியைக் கட்டியெழுப்ப முடியும்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன Ruwan Wijewardena தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. அது சாதகமான திசையை நோக்கி பயணிக்கின்றது. சிறந்த பிரதிபலன் கிடைக்கும் என நம்புகின்றோம். கிராம மட்டங்களில் பிளவுபட்டிருக்கும் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் நடக்காது: ராஜித கருத்து!

  • February 11, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் நடத்தாது.” என அடித்துக் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “உள்ளாட்சிசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்குரிய வாக்குவங்கி மேலும் வீழ்ச்சியடையும். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகமே. தோல்வியென தெரிந்தும் அதனை எதிர்கொள்வதற்கு ஆளுங்கட்சி முன்வராது என்றே தெரிகின்றது. தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்துக்கு பதில் இல்லை. […]

அரசியல் இலங்கை செய்தி

“அரசியல் லாபத்துக்காகவே கடந்த காலங்களில் வீதி அபிவிருத்தி”

  • February 11, 2026
  • 0 Comments

“கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர்.” ஆனால், தற்போதைய அரசாங்கமே மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து வீதிகள், பாலங்கள் மற்றும் இறங்குதுறைகளை அபிவிருத்தி செய்து வருகின்றது.” இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ” மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு, இன்று (11.02.2026) காலை அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. […]