அமெரிக்காவில் அதிர்ச்சி: தீக்கிரையான வீட்டில் துப்பாக்கிக் காயங்களுடன் 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் சட்ட அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். மிச்சிகன் ஏரியின் கிழக்குக் கரையில் உள்ள ‘கிராண்ட் ஹேவன் டவுன்ஷிப்’ (Grand Haven Township) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் நண்பகல் 12 மணிக்கு […]













