ஐரோப்பா

20 ஆண்டுகளாக நரக வேதனை – கணவனாலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மனைவி

பிரித்தானியாவில் சுமார் 20 ஆண்டுகளாகத் தனது மனைவிக்குத் தெரியாமலேயே அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில்  தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

2022 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் அவர் தனது மனைவிக்கு மயக்க மருந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில்  மென்செஸ்டர் மின்ஷுல் ஸ்ட்ரீட் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளை எதிர்கொண்ட குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

கிரேட்டர் மென்செஸ்டரின் ஸ்டாக்போர்ட்டைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இந்த குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட மனைவியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில், குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக  நடுவர் குழு (jury) ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்