“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்”: சட்டமூலத்தை சபையில் சமர்ப்பிக்க ஒப்புதல்
பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் ” (Protection of the State from Terrorism Act) என்ற பெயரிலான புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையின் அடிப்படையில், குறித்த விடயங்களுக்குரிய அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான […]













