செய்தி விளையாட்டு

கடைசி நொடியில் காக்கப்பட்ட கனடாவின் கௌரவம்!

  • June 13, 2026
  • 0 Comments

கனடா மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவினா அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான உலகக்கோப்பை கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஜோவோ லுகிக் அடித்த கோல் மூலம் போஸ்னியா ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது. போட்டியை நடத்தும் கனடா அணி பல கோல் வாய்ப்புகளைத் தவறவிட்டாலும், மாற்று வீரராக களமிறங்கிய கைல் லாரின் 78-வது நிமிடத்தில் ஒரு முக்கியமான கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோல் மூலம் கனடா […]

உலகம் செய்தி

ஈரான் ஊடகங்களில் கசிந்த ஒப்பந்தம்: கடுப்பில் ட்ரம்ப்!

  • June 12, 2026
  • 0 Comments

உத்தேச போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் எனக் கூறி ஈரான் அரச ஊடகங்கள் வெளிப்படுத்திய தகவல்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது Truth Social பக்கத்தில் ட்ரம்ப் இன்று (12) வெளியிட்டுள்ள பதிவில், ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகள் முற்றிலும் பொய்யான செய்திகள் என்றும், எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானியர்கள் கையாளுவதற்கு மிகவும் கண்ணியமற்ற மனிதர்கள். அவர்களிடம் நேர்மையான முறையில் […]

அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் களமிறங்குவாரா ரணில்?

  • June 12, 2026
  • 0 Comments

“நாடு படுமோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த அரசாங்கம் வீழ்ந்த பிறகு நாட்டை மீட்பதற்கு நாம் தயாராகிவருகின்றோம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “நாடு படுமோசமான நிலையில் உள்ளது. அரச இயந்திரம் ஸ்தம்பித்துள்ளது. தனியார்துறையின் கதையும் முடிந்துள்ளது. அதாவது நாடு வீழ்ந்துள்ளது. இதனை மக்கள் புரிந்துகொள்ள இடமளிக்க வேண்டும். நாட்டை எப்படி மீட்க வேண்டும் என்பது பற்றி […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டன் பொருளாதாரத்தை தாக்கிய ‘ஈரான் போர்’!

  • June 12, 2026
  • 0 Comments

ஈரான் போரானது சர்வதேச பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், பிரிட்டன் பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் பொருளாதாரம் 0.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. உலகளாவிய வர்த்தகத்திற்கான முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து, எரிசக்தி விலைகள் எகிறின. இதன் காரணமாக, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டன் பொருளாதாரம் காட்டிய வலுவான வளர்ச்சி, தற்போது தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே கணித்திருந்தபடியே, ஏப்ரல் […]

இலங்கை செய்தி

சொல்லிசை பாடகருக்கு கிடைத்தது பிணை!

  • June 12, 2026
  • 0 Comments

கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு, பிணையில் செல்ல யாழ். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று (12) வெள்ளிக்கிழமை அனுமதித்துள்ளது. யாழில் திருவிழாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில், கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான சங்கீத்சன், பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடியிருந்தார். மேற்படி இசை நிகழ்வில் தான் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து, தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப் பாடல்கள் சமூக ஊடகங்களில் […]

இலங்கை செய்தி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!

  • June 12, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியவின் தலைமையில் இக்குழு அமையவுள்ளது. மேற்படி குழுவில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்களின் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு , 1. ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ. 2. நிதி மற்றும் நிறுவன மூலோபாய நிபுணர் தேஷால் த மெல். 3. பரிவர்த்தனை மற்றும் முதலீட்டு […]

இலங்கை செய்தி

‘அரசு மௌனம்’ – யாழில் தொடரும் போராட்டம்!

  • June 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் ,இன்று 8ஆவது வெள்ளிக்கிழமையாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாகவே இன்று போராட்டம் இடம்பெற்றது. வலிகாமம் வடக்கின் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் […]

உலகம் செய்தி

அமெரிக்கா, ஈரான் ஒப்பந்தத்துக்குள் ‘லெபனான்’!

  • June 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்படும் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திலும் லெபனான் ஒரு அங்கமாக இருக்கும் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் Hassan Fadlallah தெரிவித்துள்ளார். லெபனான் அரசாங்கம், இஸ்ரேலுடன் தற்போது மேற்கொள்ளும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் தெற்குப் பகுதியில் எவ்விதத் தீர்வையும் வழங்கவில்லை எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். லெபனான் அரசு நாட்டின் நலன்களை விட்டுக்கொடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள Hassan Fadlallah, பலம் வாய்ந்த நிலையில் இருந்து நடத்தப்படும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளையே ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் தொடர்ச்சியான […]

ஐரோப்பா செய்தி

பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் பிரிட்டன் பிரதமர்!

  • June 12, 2026
  • 0 Comments

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து வளங்களும் ராணுவத்திற்கு வழங்கப்படும் என்று பிரித்தானியப் பிரதமர் Keir Starmer உறுதியளித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் John Healey விலகியுள்ள சூழ்நிலையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கத்தின் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் குறித்தும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை, ஆயுதப் படைகளின் அமைச்சர் Al Carns நேற்று நள்ளிரவில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள போதிலும், அது குறித்து பிரதமர் இதுவரை பகிரங்கமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், நாட்டின் […]

அரசியல் இலங்கை செய்தி

அன்று போராடியவர்கள் இன்று AC அறையில்: நாமல் கொதிப்பு!

  • June 12, 2026
  • 0 Comments

“வடக்கில் ஒரு கதையும், கிழக்கில் வேறொரு கதையும் இனிவரும் காலங்களில் பேசமுடியாது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (12), நடைபெற்ற திருகோணமலை தொகுதி ஆதரவாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச் இவ்வாறு கூறினார். “தொழிற்சாலைகள் மூடப்படும்போது அதற்கு எதிராக ஆளுங்கட்சியினர் குரல் எழுப்புவதில்லை. ஆனால் எதிரணியில் இருக்கும்போது போராடினார்கள். கடந்த காலங்களில் ஏழை மக்களுக்காக வீதிகளில் இறங்கி போராடியவர்கள் […]