அநுரவின் மகனுக்கு மட்டும் பரீட்சை எழுதாமல் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸில் இணைய எப்படி வாய்ப்பு கிடைத்தது?
ஜனாதிபதி அநுரகுமாரவின் மகன், கசுன் திஸாநாயக்க ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குள் நுழைவதற்கு எப்படி வாய்ப்புக் கிடைத்தது என்பதை விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தவறியுள்ளதாக விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், யோஷித ராஜபக்ச கடற்படையில் இணைந்ததில் உள்ள தவறை மட்டும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தேடிக் கொண்டிருக்கின்றது. அநுரகுமார நாடாளுமன்ற உறுப்பினராக […]



