உலகம் செய்தி

காசாவில் இன அழிப்பு: இஸ்ரேல் தாக்குதல்களில் 72,562 பேர் பலி!

  • April 23, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,562 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,320 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஒக்டோர் 7 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த இன அழிப்பு இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் கடந்த வருடம் ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. எனினும், போர்நிறுத்த விதிமுறைகளைமீறி இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. போர் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் படகுகளை அழிக்குமாறு ட்ரம்ப் உத்தரவு!

  • April 23, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், எதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதுமே இந்த உத்தரவின் பிரதான நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரானால் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அமெரிக்கா தற்போது ஈடுபட்டுவருகின்றது.

உலகம் செய்தி

எமது மண்ணிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும்: லெபனான் பிரதமர் திட்டவட்டம்!

  • April 23, 2026
  • 0 Comments

லெபனான் மண்ணிலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியும் என்று லெபனான் பிரதமர் Nawaf Salam திட்டவட்டமாக அறிவித்துள்ளார். லெபனான் எல்லையில் பாதுகாப்பு மண்டலங்கள் உருவாக்கப்படுவதை ஏற்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எனவே, அமைதி பேச்சின்போது இது தொடர்பில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவின் தலையீடு அவசியம் எனவும் லெபனான் பிரதமர் Nawaf Salam இடித்துரைத்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களைக் களைவது என்பது ஒரு நீண்டகாலச் செயல்முறை என்றும், […]

உலகம் செய்தி

ஈரானிலிருந்து வந்த கப்பலை இந்திய பெருங்கடலில் வழிமறித்த அமெரிக்கா!

  • April 23, 2026
  • 0 Comments

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பலொன்றை அமெரிக்கப் படைகள், இந்தியப் பெருங்கடலில் வைத்து வழிமறித்துள்ளன. மெஜஸ்டிக் எக்ஸ் என்ற பெயருடைய கப்பலில் ஏறி அமெரிக்க ராணுவத்தினர் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். ஈரானுக்குத் தேவையான பொருள் உதவிகளை வழங்கும் சந்தேகத்திற்குரிய கப்பல்களைத் இவ்வாறு தொடர்ந்து கண்காணித்து தடுத்து நிறுத்தப்போவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை மீறும் மற்றும் விரோதப் போக்குடைய கப்பல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக இந்த கடல்சார் தலையீடு அமைந்துள்ளது என அமெரிக்க […]

உலகம் செய்தி

எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: IEA தலைவர் எச்சரிக்கை!

  • April 23, 2026
  • 0 Comments

உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமையின் International Energy Agency (IEA) தலைவர் Fatih Birol எச்சரிக்கை விடுத்துள்ளார். போர்ச்சூழ்நிலையால் நாளாந்தம் சுமார் 13 மில்லியன் பெரல் எண்ணெய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் விளைவாக எரிபொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட தாக்கங்கள் ஏற்படக்கூடும். இந்த நெருக்கடியைச் சமாளிக்க உலக நாடுகள் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் எனவும் IEA தலைவர் எதிர்வுகூறியுள்ளார். […]

உலகம் செய்தி

ஈரான் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்பதில் ட்ரம்ப் உறுதி!

  • April 23, 2026
  • 0 Comments

  ஈரான் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியாக உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதேபோல ஒரு தரமான மற்றும் நிரந்தரமான ஒப்பந்தத்தை எட்டுவதே ட்ரம்பின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் தரப்பிலிருந்து உறுதியான பதில் வராத காரணத்தினாலேயே போர் நிறுத்த காலக்கெடுவை நீட்டிக்க டிரம்ப் முடிவு செய்தார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதி பேச்சை ஆரம்பித்து […]

இந்தியா செய்தி

பலமடைந்துள்ள இந்திய ராணுவ வலிமை!

  • April 23, 2026
  • 0 Comments

“ இந்தியாவின் ராணுவ வலிமை முன்னெப்போதையும் விட பன் மடங்கு வலுப்பெற்றுள்ளது.” – என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரைத்துள்ளார். ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நமது ராணுவம் என்ன சாதித்துள்ளது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நமது ராணுவ வலிமை வலுப்பெற்றுள்ளது. இந்தியா உலகிலுள்ள […]

இலங்கை செய்தி

இலங்கை சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலை என்ன?

  • April 23, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 19 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 211 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஏப்ரல் 1 முதல் 19 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 25 ஆயிரத்து 634 பேரும், பிரிட்டனில் இருந்து 7 ஆயிரத்து 672 பேரும், ஆஸ்திரேலியாவில் 7 ஆயிரத்து 351 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். […]

உலகம் கல்வி

லெபனான், இஸ்ரேலுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதி பேச்சு!

  • April 23, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதி பேச்சு வாஷிங்டனில் நடைபெறவுள்ளது. தற்போது அமுலில் உள்ள 10 நாள் தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் எனக் கூறப்படுகின்றது. லெபனான் எல்லைகளில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறுதல் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவித்தல் போன்ற கோரிக்கைகளை லெபனான் ஜனாதிபதி முன்வைத்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் பலனாகவே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஊடகவியலாளர் பலி: லெபனான் கடும் சீற்றம்!

  • April 23, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர் அமல் கலீல் Amal Khalil கொல்லப்பட்டதை லெபனான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. மேற்படி தாக்குதலில் மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். இஸ்ரேல் வேண்டுமென்றே ஊடகவியலாளர்களையும், சுகாதார சேவையாளர்களையும் குறிவைத்ததாக லெபனான் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதலில் பலியான ஊடகவியலாளர் அல்-அக்பார் என்ற செய்தி நிறுவனத்திற்காகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஊடகவியலாளர்மீது தாக்கங் தாக்குதல் நடத்தவில்லை என எனவும், மீட்புப் பணிகளைத் தடுக்கவில்லை என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. […]