தெற்கு லெபனானில் 70 இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்!
தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தீவிரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்துக்குள் இந்த வான்வழித் தாக்குதல்களில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, எதிர்த்தரப்பின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் முக்கிய கட்டடங்களை குறிவைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மோதலில் பல ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதுடன், குறைந்தது ஐந்து பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனான் இராணுவ வீரர் ஒருவரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.




