இலங்கை செய்தி

ஈரான் தூதரகத்துக்கு சென்று அனுதாபம் பகிர்ந்தார் ரிஷாட்!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி காமெய்னியின் மறைவை முன்னிட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, இன்று (05) கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், அங்குள்ள தூதுவர். அலிடெர்ஷா டெல்கொஷ்வை சந்தித்து தனது அனுதாபத்தைத் பகிர்ந்துகொண்டதுடன், இரங்கல் பதிவேட்டிலும் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார். இந்த விஜயத்தின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட […]

இலங்கை செய்தி

அவசரமாக புதுடெல்லி பறந்தார் விஜித ஹேரத்!

  • March 5, 2026
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவுக்கு Vijitha Herath இன்று (05) பயணம் மேற்கொண்டுள்ளார். ரைசினா கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் புதடெல்லி சென்றுள்ளார். ஈரானிய போர்க்கப்பல், இலங்கைக்கு அருகே சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி கப்பல் இந்தியாவில் கூட்டு பயிற்சியை முடித்துகொண்டு திரும்பும் வழியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் டெல்லி விஜயம் முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.  

செய்தி

யுவதியின் சடலம் துஷ்பிரயோகம்: நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு!

  • March 5, 2026
  • 0 Comments

மலையக பெருந்தோட்டப் பகுதியில் உள்ள வைத்தியசாலையொன்றில் பிண அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொடூர சம்பவத்துக்கு நீதி கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டம், டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையிலேயே இக்கொடூரம் சம்பவம் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. டிக்கோயா பகுதியை சேர்ந்த 23 வயது யுவதியொருவரின் சடலம் […]

இலங்கை செய்தி தமிழ்நாடு

7 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கரையொதுங்கிய யாழ்.மீனவர்கள்!

  • March 5, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணி கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன இரண்டு மீனவர்கள், ஏழு நாள்களின் பின்னர் தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற இந்த மீனவர்களின் படகு, நடுக்கடலில் இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த படகு, கடல் நீரோட்டத்தினால் இந்தியக் கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த யாழ். மீனவர்களை அவதானித்த தமிழக […]

செய்தி

ஈரான் தூதரகத்தில் குவியும் இலங்கை அரசியல் வாதிகள்!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானிய உயர் தலைவரின் மறைவையிட்டு, கொழும்பிலுள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் கையொப்பமிட்டனர். அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய உயர் தலைவர் மற்றும் ஈரானிய மக்களின் மறைவுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர், இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரசா டெல்கொஷ்ஷைச் சந்தித்துத் தமது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த […]

உலகம்

ஈரானுக்கு முடிவு கட்டுவோம்! கூட்டு தாக்குதல் தொடரும் என்கிறார் ட்ரம்ப்!!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் ஆயுதக் கிடங்கு விரைவாக அழிக்கப்பட்டு வருகிறது. கூட்டு வான் வழி தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். “ நாம் இப்போது மிகவும் வலுவான நிலையில் இருக்கிறோம். ஈரானின் தலைமை வேகமாக சிதறி வருகிறது. கெட்டவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் போது கெட்ட விடயங்களே நடக்கும். அதனால்தான் அழிக்கின்றோம்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்பதற்ற நிலை உக்கிரமடைந்துவருகின்றது . இதனால் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு அருகே மற்றுமொரு ஈரான் கப்பல்!

  • March 5, 2026
  • 0 Comments

இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் மற்றொரு ஈரானிய கப்பல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. “ அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சகமும் கப்பலின் இருப்பை அறிந்துள்ளது. அதில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (05) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மேற்படி கப்பல் இலங்கை […]

செய்தி

மத்திய கிழக்கு வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித மந்திராலோசனை!

  • March 5, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள வெளிவிவகார அமைச்சர்களுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். தொலைபேசி ஊடாகவே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கட்டார், லெபனான், ஜோர்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனேயே அவர் கலந்துரையாடியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் மேற்படி நாடுகள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அதற்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். மேற்படி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார். […]

இலங்கை செய்தி

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்புக்காக உரிய தலையீடு: இலங்கை உறுதி!

  • March 5, 2026
  • 0 Comments

“ இந்து சமுத்திரத்தின் அமைதிதான் எமது எதிர்பார்ப்பாகும். இதற்காக உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். இந்து சமுத்திர அமைதி மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (05) கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள சர்வதேச எல்லையில் வைத்து அனர்த்தத்துக்குள்ளான ஈரான் கப்பலில் இருந்து 32 […]

ஆஸ்திரேலியா உலகம்

மத்திய கிழக்கு போர்: முக்கிய இரு பிரதமர்கள் விடுத்துள்ள கூட்டு அறிவிப்பு!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தல் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று கனடா Canada மற்றும் ஆஸ்திரேலியா Australia ஆகிய நாடுகளின் பிரதமர்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய கிழக்கில் போர் நீடிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை எனக் கூறிய அவர்கள், போர் நிறுத்தத்தை பகிரங்கமாக வலியுறுத்தவில்லை. கனடா பிரதமர் மார்க் கார்னி Mark Carney ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று கனடா பிரதமர் உரையாற்றினார். அதன்பின்னர் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தினர். பின்னர் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர். […]

error: Content is protected !!