யாழ்ப்பாணத்திலிருந்து யாசகர்கள் வெளியேற்றம்
யாழ்ப்பாணம் நகரின் தூய்மையைப் பேணுவதற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டு வரும் அசௌகரியங்களைத் தடுப்பதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து யாசகம் பெற்று வந்த 30 இற்கும் மேற்பட்ட நபர்கள் இன்று பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர். யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலிலும், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜாவின் கோரிக்கை மற்றும் யாழ். மாநகர சபையின் ஒத்துழைப்புடனும் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ். கோட்டைச் சுற்றுவட்டம், மத்திய பஸ் நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார […]













