அமெரிக்கா, இஸ்ரேலை பழி தீர்ப்போம்: ஈரான் தளபதி சபதம்
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை பழிதீர்ப்போம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி சபதம் செய்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் வரலாற்று நினைவிலிருந்து ஒருபோதும் அழியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிகேடியர் ஜெனரல் அகமது வாஹிதி (Brigadier-General Ahmad Vahidi),
“நீதி முழுமையாக நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளைக் கொல்லும் அமெரிக்க ராணுவத்திற்கு தகுந்த பதில்டி கொடுக்கப்பட வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து செபா (Sepah) செய்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அமெரிக்காவின் குற்றவியல் தலைவர்களும், இஸ்லாமிய புரட்சி மற்றும் எதிர்ப்பு முன்னணியின் அனைத்து எதிரிகளும் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும்; இந்த தெய்வீகத் தலைவரை கோழைத்தனமாக படுகொலை செய்ததன் மூலம், அவர்களால் ஒருபோதும்… எதிர்ப்பு இயக்கத்தின் கொடியைக் கீழே வீழ்த்த முடியாது.
அமிர்தர்களை (Martyrs) இழந்ததற்கான பழிவாங்கலும், இதற்கு காரணமானவர்களுக்கான தண்டனையும்… ஒரு திட்டவட்டமான, நியாயமான மற்றும் மறக்க முடியாத கோரிக்கையாகத் தொடரும்” என்றும் அவர் கூறியுள்ளார்.




