இளம் பெண் பாலியல் துஷ்பிரயோகம் – நாட்டிங்ஹாம் நகர மையம் சுற்றிவளைப்பு!
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் (Nottingham) நகர மையத்தில் இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளதுடன், லேஸ் மார்க்கெட் சதுக்கத்தை மூடியுள்ளனர்.
அத்துடன் ஆடம்ஸ் வாக் ( Adams Walk ) சாலையிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரை ஒரு இளம் பெண் என்று மட்டுமே விவரிக்கும் காவல்துறை, அவருக்கு அதிகாரிகள் உதவி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.





