புனேவில் இருந்து 196 பேருடன் பயணித்த விமானத்தில் அவசரநிலை
மகாராஷ்டிர மாநிலம் புனே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. 196 பயணிகளுடன் புறப்பட்ட குறித்த விமானத்தின் லேண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் புனே விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு ஏதுவாக இண்டிகோ நிறுவனம் மற்றொரு விமானத்தை ஏற்பாடு செய்யததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இண்டிகோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பதும் […]



