உலகம் செய்தி

62 நாட்களுக்குள் லெபனானில் 2,696 பேர் பலி!

  • May 4, 2026
  • 0 Comments

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 2026 மார்ச் 2 முதல் இதுவரையில் லெபனானில் 2,696 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8,264 பேர் காயமடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல், லெபனானுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திவருகின்றது. குறிப்பாக, தெற்கு லெபனானில் இஸ்ரேல் உக்கிர தாக்குதலை நடத்திவருகின்றது. லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அமைதி பேச்சுக்காக ஈரானில் முன்வைத்துள்ள 14 பரிந்துரைகளில், லெபனான்மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பது பிரதான விடயமாகும். அதேவேளை, காசாவிலும் […]

உலகம் செய்தி

கப்பல்மீது ஏவுகணை தாக்குதலா? அமெரிக்கா மறுப்பு!

  • May 4, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாக நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. எனினும், இதனை அமெரிக்கா மறுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் ராடார் கருவிகளை அணைத்துவிட்டு அத்துமீற முயன்றதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய கடற்படையின் எச்சரிக்கைகளை அமெரிக்கப் படைகள் அலட்சியப்படுத்தியதால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • May 4, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மாலைதீவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று (04) கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr. Mohamed Muizzu) ஆகியோர் முன்னிலையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இதற்குரிய நிகழ்வு இடம்பெற்றது. மாலைதீவு – இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுகாதாரம், விளையாட்டு, சுற்றுலா, கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 01. […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு குவியும் வாழ்த்து! மண்கவ்விய ஸ்டாலின்!!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக தேர்தலில் இதுவரையில் 109 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் அரசியல் பிரமுகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். சமூகவலைத்தளங்கள் முழுவதையும் தவெக ஆக்கிரமித்துள்ளது. இலங்கை உட்பட உலக நாடுகளில் வாழும் விஜய் ரசிகர்கள் தவெக வெற்றியை கொண்டாடிவருகின்றனர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சமூகவலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டுவருகின்றனர். ஸ்டாலின் தோல்வி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், […]

இலங்கை செய்தி

தேசிய ஒற்றுமை உறுதிப்படுத்தப்படும்: கம்பன் விழாவில் ஜனாதிபதி உறுதி!

  • May 4, 2026
  • 0 Comments

அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு தேவை என்றும், தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நேற்று (03) மாலை நடைபெற்ற “கம்பன் விழா”வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் முக்கிய இலக்கிய மற்றும் கலாச்சார விழாவான கம்பன் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி பாரம்பரிய இந்து சம்பிரதாயங்களுடன் வரவேற்கப்பட்டார். இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை செய்தி

மாலைதீவு ஜனாதிபதிக்கு அநுர தலைமையில் அமோக வரவேற்பு!

  • May 4, 2026
  • 0 Comments

இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாலைதீவு மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் மேம்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு இந்த அரச பயணத்தை மேற்கொள்கிறார். மாலைதீவு […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்தார் விஜய்!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. தஞ்சை உட்பட 4 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய சூழல் உதயமாகும் என்ற நம்பிக்கை உள்ளதால், அடுத்தக்கட்ட நகர்வுகளை தொடர்பில் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்திவருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. 10 வரையான தொகுதிகளில் 2ஆம் இடத்தில் உள்ள தவெக , முதலிடம் வருவதற்கு 1000 வரையிலான வாக்கு வித்தியாசமே […]

உலகம் செய்தி

“Project Freedom” – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

  • May 4, 2026
  • 0 Comments

அமெரிக்கா தனது கப்பல்களைப் பாதுகாக்க ஹார்முஸ் நீரிணைப் பகுதிக்குள் நுழைந்தால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை பாதை முழுவதும் ஈரானிய படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அங்கு நுழையும் வெளிநாட்டுப் படைகளைத் தாங்கள் எதிர்க்கப் போவதாகவும் மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி தெரிவித்துள்ளார். அமெரிக்கா “Project Freedom” என்ற திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் போர் விமானங்களை அந்தப் பகுதியில் நிறுத்தத் தயாராகிவரும் நிலையிலேயே ஈரான் இந்த எச்சரிக்கையை […]

உலகம் செய்தி

‘Project Freedom’; 15,000 படையினரை களமிறக்கும் அமெரிக்கா!

  • May 4, 2026
  • 0 Comments

‘Project Freedom’ என்ற பெயரில் ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய நடவடிக்கையை அமெரிக்க இராணுவம் தொடங்கியுள்ளது. இதற்காக சுமார் 15,000 படைவீரர்கள் மற்றும் 100 போர் விமானங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் , சரக்கு போக்குவரத்தை தடையின்றி பராமரிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு அவசியமானது என்று அட்மிரல் பிராட் கூப்பர் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அலை! முடிவுக்கு வருகிறது மம்தா ஆட்சி!!

  • May 4, 2026
  • 0 Comments

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி 181 வெற்றி நடைபோட்டுவருகின்றது. திரிணமூல் காங்கிரஸ் 89 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் திகதியும் நடைபெற்றன. இரண்டாம் கட்டத் தேரத்லில் வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பால்டா தொகுதிக்கு வரும் 21ம் திகதி […]

error: Content is protected !!