பொதுத்தேர்தலை நடத்துமாறு Reform கட்சி வலியுறுத்து
பிரித்தானியா Reform கட்சித் தலைவர் Nigel Farage , தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரை மிகக் கடுமையாக விமர்சித்து , உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
பதவி விலகும் அறிவிப்பை Keir Starmer விடுத்துள்ள நிலையிலேயே, UK Reform கட்சி தலைவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தொழிலாளர் கட்சி அரசாங்கம் குடிவரவு மற்றும் சாகோஸ் தீவு விவகாரம் போன்ற முக்கிய அம்சங்களில் வாக்காளர்களை ஏமாற்றிவிட்டதாக Nigel Farage குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்டார்மர் ஒரு திறமையற்ற தலைவர் என்று விமர்சித்துள்ள அவர், அரசியல்வாதிகள் மக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து சிதைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தலைமை மாறினாலும், ஆண்டி பர்ன்ஹாம் போன்றவர்கள் ஸ்டார்மரின் அதே தோல்வி அடைந்த கொள்கைகளையே பின்பற்றுவார்கள் என்று Nigel Farage சுட்டிக்காட்டியுள்ளார்.




