ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய பிரதமர் ராஜினாமா

தனது ராஜினாமாவை அறிவிப்பதற்கு முன்பு, "அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் திவாலான" தொழிலாளர் கட்சியைத் தான் பொறுப்பேற்றதாக ஸ்டார்மர் கூறினார்.

பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவிகளிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

தனது ராஜினாமாவை அறிவிப்பதற்கு முன்பு, “அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் திவாலான” தொழிலாளர் கட்சியைத் தான் பொறுப்பேற்றதாக ஸ்டார்மர் கூறினார்.

யூத எதிர்ப்பு எனும் நஞ்சைப் பிடுங்கி எறிந்ததன் மூலம் கட்சியை மாற்றியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினம், தான் எடுத்த ஒவ்வொரு முடிவும், ‘நான் நேசிக்கும் நாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதற்காகவே’ எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தனது முடிவை மன்னருக்குத் தெரிவித்துள்ளதாகவும் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சியை வழிநடத்த தாம் ‘மிகவும் பொருத்தமானவரா’ என்ற கேள்விக்கு, ‘தமது நாடாளுமன்றக் கட்சியின் பதிலைக் கேட்டுவிட்டதாக’ சர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

“அந்தப் பதிலை நான் நல்லெண்ணத்துடன் ஏற்றுக்கொள்கிறேன்,” எனவும் அவர் கூறியுள்ளார்

அதனால்தான் நான் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். எனது இந்த முடிவைத் தெரிவிப்பதற்காக இன்று காலை மாட்சிமை பொருந்திய மன்னரிடம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

“போட்டி முடியும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன்” என்றும், “முறையான வகையில் அதிகாரப் பரிமாற்றத்தை உறுதிசெய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்றும் ஸ்டார்மர் கூறுகிறார்.

அடுத்த பிதரமருக்க தனது “முழுமையான மற்றும் நிபந்தனையற்ற ஆதரவை” அளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி