இஸ்லாமாபாத் நகரில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதியை , பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பல அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாகிஸ்தானில் களமிறங்கினார் ஈரான் ஜனாதிபதி

  • June 23, 2026
  • 0 Comments

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் கடந்த பெப்ரவரி மாதம் ஏற்பட்ட போருக்கு பின்னர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இன்று (24) பாகிஸ்தான் சென்றுள்ளார். இஸ்லாமாபாத் நகரில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதியை , பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பல அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர். ஈரான் ஜனாதிபதியுடன்அந்நாட்டு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்றும் இப்பயணத்தில் […]

சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இந்த விரிவான தொடர்பாடல் அமைப்பு, இலங்கை கடற்படையின் கடலோரக் கண்காணிப்புக் கப்பல்களில் (OPVs) நிறுவப்படவுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை கடற்படைக்கு செயற்கைகோள் தொடர்பாடல் அமைப்பு கையளிப்பு

  • June 23, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படையின் கடல்சார் இணைப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்கா மேம்பட்ட Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை இலங்கை கடற்படைக்கு (SLN) கையளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஜூன் 22 கொழும்புத் துறைமுகத்தில் SLNS கஜபாஹு கப்பலில் நடைபெற்ற விசேட வரவேற்பு நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் துறை உதவி செயலாளர் […]

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அரசியல் இலங்கை செய்தி

‘இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைவடைந்துள்ளது’

  • June 23, 2026
  • 0 Comments

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: “கரைவலை மீன்பிடி என்பது ஒரு பாரம்பரிய முறைமையாகும். அந்த முறைமை இலங்கையில் தடை செய்யப்படவில்லை; அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எனினும், உழவு […]

வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை நிறுவனத்துக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தும் நிகழ்வின்போது இலங்கை கல்வி செய்தி

இலங்கையில் கால்பதித்தது ‘வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகம்’

  • June 23, 2026
  • 0 Comments

இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு மைல்கல்லாக, வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகம் (University of West London – UWL) தனது கிளை வளாகத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வியை வழங்கும் முன்னோடி நிறுவனமான ANC வளாகத்துடன் இணைந்து செயல்படும் இந்த நிறுவனம், மாணவர்கள் தங்கள் தாய்நாட்டிலேயே இருந்தபடி பிரித்தானிய கல்வித் தரத்திலான பட்டப்படிப்புகளைப் பெற வழிவகுக்கிறது. பாடத்திட்டங்கள், மதிப்பீடுகள் மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகிய அனைத்தும் வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தின் தரநிலைகளுக்கு ஏற்ப […]

யாழ்ப்பாணத்தில் அர்ச்சுனாவின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றத்திற்கு வந்த ‘செருப்பு மாலை’

  • June 23, 2026
  • 0 Comments

“மக்கள் வாழ்ந்தால் போதும்; அவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் எனில் நான் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன். இதுதான் எனது அரசியல்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், யாழ்ப்பாணத்தில் தனது உருவப்படத்திற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் அர்ச்சுனா எம்.பி. சபையில் கருத்து வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில்: “அண்மையில் எனது உருவப்படத்திற்குச் செருப்பு மாலை ஒன்று […]

ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) ஐரோப்பா செய்தி

நம்பகத்தன்மையை இழந்துவிட்டது ஐரோப்பா: ஈரான் விசனம்

  • June 23, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன நடத்திய தாக்குதலின்போது போது ஐரோப்பிய நாடுகள் கடைபிடித்த அணுகுமுறையை ஈரான் கடுமையாக விமரிசித்துள்ளது. மேற்படி போரின்போது ஐரோப்பிய சக்திகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தவறான கொள்கைகளால் உலக அரங்கில் ஐரோப்பாவின் நம்பகத்தன்மை மற்றும் அந்தஸ்து கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ” எதிராகத் திணிக்கப்பட்ட இரண்டு போர்களின் போதும், ஐரோப்பிய நாடுகள் முற்றிலும் பொருத்தமற்ற […]

டென்மார்க், கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டின் போது பிரதமர் கீர் ஸ்டார்மர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் உயர் பிரதிநிதி காஜா காலாஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். (அக்டோபர் 2, 2025). ஐரோப்பா செய்தி

‘இவரே சிறந்த தலைவர்’ – Keir Starmer ஐ புகழும் ஐரோப்பிய தலைவர்கள்

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் Keir Starmer உள்நாட்டில் விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், முந்தைய பிரதமர்களை விட இவருடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருந்ததாக ஐரோப்பிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாது என்பதில் ஸ்டார்மர் உறுதியாக இருந்தாலும், பிரெக்சிட் தாக்கங்களுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளுடனான உறவை மேம்படுத்த அவர் கடுமையாக உழைத்தார். மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனி ஜனாதிபதி பிரெடெரிக் மெர்ஸ் ஆகிய ‘E3’ கூட்டணிக் தலைவர்களுடன் இணைந்து, உக்ரைனுக்கான பிரித்தானியாவின் […]

ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. ஐரோப்பா செய்தி

வெப்ப அலை: பிரித்தானியாவில் சிவப்பு எச்சரிக்கை

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வானிலை ஆய்வு மையம் முதன்முறையாக அதிதீவிர சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வெப்ப அலை பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக மின்சாரம், நீர் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். லண்டன் முதல் பர்மிங்காம் வரையிலான பகுதிகளில் இந்த கடுமையான பாதிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அத்துடன், சில இடங்களில் இடியுடன் கூடிய […]

அல்ஜீரியாவின் அமின் குய்ரி வெற்றி கோலை அடித்ததைக் கொண்டாடுகிறார். செய்தி விளையாட்டு

மீண்டெழுந்தது அல்ஜீரியா அணி

  • June 23, 2026
  • 0 Comments

உலகக்கிண்ண தொடரில் ஆரம்பப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் 3-0 எனத் தோல்வியடைந்த அல்ஜீரியா, நேற்றைய போட்டியில் ஜோர்டான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, மீண்டுவந்துள்ளது. மாற்று வீரராகக் களம் புகுந்த நாதிர் பென்புவாலி மற்றும் அமீன் குயிரி ஆகியோரின் அதிரடிப் பின்பாதி கோல்களின் உதவியுடன் இந்த வெற்றி சாத்தியமானது. இந்தத் தோல்வியின் மூலம், உலகக் கிண்ணத் தொடருக்கு முதன்முறையாகத் தகுதிபெற்றிருந்த ஜோர்டான் அணி, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. திங்கட்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் […]

அணுசக்தி சோதனைகள் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்களை ஈரானிய அதிகாரிகள் மறுத்துள்ள பின்னணியில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. உலகம் செய்தி

‘சொல் அல்ல செயலே முக்கியம்’ – ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி

  • June 23, 2026
  • 0 Comments

வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளின் வெற்றி என்பது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட கடமைகளைச் சரியாகச் செயல்படுத்துவதைப் பொறுத்தே அமையும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் Masoud Pezeshkian வலியுறுத்தியுள்ளார். வெறும் பேச்சுக்களைக் காட்டிலும் நடைமுறைச் செயல்பாடுகளே முன்னேற்றத்தை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அசல் உடன்படிக்கைக்குப் புறம்பான கருத்துக்கள் பேச்சுவார்த்தைக்கு எவ்வித உதவியும் செய்யாது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அணுசக்தி சோதனைகள் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் […]