‘இவரே சிறந்த தலைவர்’ – Keir Starmer ஐ புகழும் ஐரோப்பிய தலைவர்கள்
பிரித்தானிய பிரதமர் Keir Starmer உள்நாட்டில் விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், முந்தைய பிரதமர்களை விட இவருடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருந்ததாக ஐரோப்பிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாது என்பதில் ஸ்டார்மர் உறுதியாக இருந்தாலும், பிரெக்சிட் தாக்கங்களுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளுடனான உறவை மேம்படுத்த அவர் கடுமையாக உழைத்தார்.
மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனி ஜனாதிபதி பிரெடெரிக் மெர்ஸ் ஆகிய ‘E3’ கூட்டணிக் தலைவர்களுடன் இணைந்து, உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ராணுவ ரீதியான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதில் Keir Starmer முக்கியப் பங்கு வகித்தார்.
இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் X தளத்தில் விடுத்துள்ள பதிவில்,
“பல தலைவர்கள் ஒரு சிறந்த ராஜதந்திரியாக உருவெடுக்கப் பல ஆண்டுகள் ஆகும், ஆனால் நீங்கள் வெறும் இரண்டு ஆண்டுகளில் அதனைச் சாதித்துக் காட்டியுள்ளீர்கள்.
உங்களால் ஐரோப்பிய மற்றும் உக்ரைனின் பாதுகாப்பு பலமடைந்துள்ளது. நன்றி, அன்பான கீர்” எனப் பாராட்டியுள்ளார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவை ஸ்டார்மர் தொடர்ந்து வலுப்படுத்தினார்.
இதற்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஸ்டார்மருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
“எப்போதும் தொடர்பில் இருந்து, தேவையான உதவிகளைச் செய்யத் துடித்ததற்கு நன்றி கீர். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்கு வரலாம், உங்களை வரவேற்கிறோம்” என ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.




