ஐரோப்பா செய்தி

நம்பகத்தன்மையை இழந்துவிட்டது ஐரோப்பா: ஈரான் விசனம்

ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei)

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன நடத்திய தாக்குதலின்போது போது ஐரோப்பிய நாடுகள் கடைபிடித்த அணுகுமுறையை ஈரான் கடுமையாக விமரிசித்துள்ளது.

மேற்படி போரின்போது ஐரோப்பிய சக்திகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய தவறான கொள்கைகளால் உலக அரங்கில் ஐரோப்பாவின் நம்பகத்தன்மை மற்றும் அந்தஸ்து கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

” எதிராகத் திணிக்கப்பட்ட இரண்டு போர்களின் போதும், ஐரோப்பிய நாடுகள் முற்றிலும் பொருத்தமற்ற மற்றும் தவறான நிலைப்பாடுகளையே எடுத்தன.

உலக நாடுகள் அனைத்தும் இந்த மோசமான நடத்தையை நேரடியாகக் கண்டுள்ளன,” என்று Esmaeil Baghaei மேலும் கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி