வெப்ப அலை: பிரித்தானியாவில் சிவப்பு எச்சரிக்கை
பிரித்தானியாவில் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வானிலை ஆய்வு மையம் முதன்முறையாக அதிதீவிர சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த வெப்ப அலை பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்பம் காரணமாக மின்சாரம், நீர் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
லண்டன் முதல் பர்மிங்காம் வரையிலான பகுதிகளில் இந்த கடுமையான பாதிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அத்துடன், சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.
பிரான்சில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெப்பத்தின் தாக்கத்தால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அங்கு ஆயிரக்கணக்கான பாடசாலைகள்மூடப்பட்டுள்ளதுடன், பிரதமர் அவசரக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த அதீத வெப்பம் இரவு நேரங்களிலும் நீடிப்பதால் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர்.




