இலங்கையில் கால்பதித்தது ‘வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகம்’
இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு மைல்கல்லாக, வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகம் (University of West London – UWL) தனது கிளை வளாகத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வியை வழங்கும் முன்னோடி நிறுவனமான ANC வளாகத்துடன் இணைந்து செயல்படும் இந்த நிறுவனம், மாணவர்கள் தங்கள் தாய்நாட்டிலேயே இருந்தபடி பிரித்தானிய கல்வித் தரத்திலான பட்டப்படிப்புகளைப் பெற வழிவகுக்கிறது.
பாடத்திட்டங்கள், மதிப்பீடுகள் மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகிய அனைத்தும் வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தின் தரநிலைகளுக்கு ஏற்ப அமைந்திருக்கும்.
அத்துடன், பாடநெறிகள் மற்றும் சான்றிதழ்கள் மீதான கல்விசார் மேற்பார்வையை வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகமே நேரடியாகக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை இலங்கையிலேயே பெறுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. இந்த முயற்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் மற்றும் தொழில்முறைத் தன்னம்பிக்கைக்கும் பெரும் வலுசேர்க்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





