‘சொல் அல்ல செயலே முக்கியம்’ – ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி
வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளின் வெற்றி என்பது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட கடமைகளைச் சரியாகச் செயல்படுத்துவதைப் பொறுத்தே அமையும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் Masoud Pezeshkian வலியுறுத்தியுள்ளார்.
வெறும் பேச்சுக்களைக் காட்டிலும் நடைமுறைச் செயல்பாடுகளே முன்னேற்றத்தை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அசல் உடன்படிக்கைக்குப் புறம்பான கருத்துக்கள் பேச்சுவார்த்தைக்கு எவ்வித உதவியும் செய்யாது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி சோதனைகள் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்களை ஈரானிய அதிகாரிகள் மறுத்துள்ள பின்னணியில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
ஈரானின் இந்த நிலைப்பாடு சர்வதேச ஒப்பந்தங்களின் நேர்மையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.





