பிள்ளையானை சிறையில் சந்தித்தது உண்மைதான்: ஒப்புக்கொண்டார் நாமல்!
“போரை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்தான் பிள்ளையான். எனவே, அவர் அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டால் நாம் அவருக்காக முன்னிலையாவோம். நாம் பிள்ளையானை திருட்டுதனமாக சந்திக்கவில்லை.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று மேலும் கூறியவை வருமாறு , “பிள்ளையானைச் சந்திப்பதற்காக நாம் சுவர் ஏறி குதித்து சிறைச்சாலைக்குள் செல்லவில்லை. சட்டப்பூர்வமாகவே அவரை சந்தித்திருந்தோம். பிள்ளையானை சந்திக்கும்போது சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் அருகில் இருந்தார். சிறைச்சாலைக்குள் இரகசிய […]













