கடந்த ஓராண்டில் மட்டும் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள் டிஜிட்டல் தளங்களில் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வியாழக்கிழமை வெளியிட்ட தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: யுனிசெப் எச்சரிக்கை

  • September 3, 2026
  • 0 Comments

கடந்த ஓராண்டில் மட்டும் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள் டிஜிட்டல் தளங்களில் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வியாழக்கிழமை வெளியிட்ட தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான சம்பவங்கள் சமூக வலைதளங்களிலேயே நடந்துள்ளன. ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களில் 12 முதல் 17 வயதிற்குட்பட்ட ஐந்து சிறுவர்களில் ஒருவர், தாங்கள் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்ட ஆண்டிற்குள் […]

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுமார் 4,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

நேபாளத்தில் பலி எண்ணிக்கை 1,200 ஆக அதிகரிப்பு: ட்ரோன் குழுக்களை அனுப்பும் ஆஸ்திரேலியா

  • September 3, 2026
  • 0 Comments

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுமார் 4,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இந்தச் சூழலில், அங்கு மனிதநேய உதவிகளை விரைவுபடுத்தியுள்ள ஆஸ்திரேலியா, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகச் சிறப்பு ட்ரோன் நிபுணர்களை அனுப்பவுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் Penny Wong தெரிவிக்கையில், “இந்த பேரழிவின் தீவிரத்தை நாம் அனைவரும் ஊடகங்கள் வழியாகக் காண்கிறோம். நேபாள அதிகாரிகள் சுமார் 20,000 பேரை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுவரை […]

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற, ஆளுகை, நீதி மற்றும் பொமக்கள் பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தீர்மானித்துள்ளது. இலங்கை செய்தி

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவி ரத்து

  • September 3, 2026
  • 0 Comments

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற, ஆளுகை, நீதி மற்றும் பொமக்கள் பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தீர்மானித்துள்ளது. 2009-ஆம் ஆண்டின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டம், எண் 35-ஐ ரத்து செய்வதற்காக இந்த சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, ஆயுதப் படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டம் 2009-ல் இயற்றப்பட்டது. இருப்பினும், நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முப்படைகளின் […]

சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீனாவிற்கு பதிலடி: இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்கா – ஆஸ்திரேலியா ராணுவக் கூட்டாண்மை விரிவாக்கம்

  • September 3, 2026
  • 0 Comments

சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், “ஆஸ்திரேலியாவில் அமெரிக்கப் படைகளின் இருப்பு அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார். […]

வளைகுடாப் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும், அதற்கு தனது பெயரைச் சூட்டலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை முன்வைத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு

  • September 3, 2026
  • 0 Comments

வளைகுடாப் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும், அதற்கு தனது பெயரைச் சூட்டலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை முன்வைத்துள்ளார். தெற்கு ஈரானின் சிரிக் நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். […]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இன்று (03) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை செய்தி

22 இற்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம்

  • September 3, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இன்று (03) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் பிற்பகல் 2:00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடைபெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: “நாம் நீதிமன்ற நடவடிக்கையை விமர்சிக்கவில்லை. 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவே எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம். ஆளுங்கட்சியிடம் 159 பாராளுமன்ற […]

அமெரிக்காவின் தேசிய காவல்படைப் பிரிவுடன் கூடுதல் ஒத்துழைப்பை கோரும் இலங்கை இலங்கை செய்தி

அமெரிக்காவின் தேசிய காவல்படைப் பிரிவுடன் கூடுதல் ஒத்துழைப்பை கோரும் இலங்கை

  • September 3, 2026
  • 0 Comments

இலங்கையின் பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா, அமெரிக்காவின் தேசிய காவல் பிரிவின் தலைவர், ஜெனரல் ஸ்டீவன் நோர்டாஸ் (Chief of the National Guard Bureau of the United States, General Steven Nordhaus) உடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கனடாவின் விக்டோரியா நகரில் இந்தோ- பசுபிக் பாதுகாப்புத் தலைவர்களின் மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த இருதரப்பு கலந்துரையாடலின் போது, ​​பேரிடர் மீட்பு, உள்கட்டமைப்பு […]

உக்ரைன், ஜெர்மனியுடன் இணைந்து ட்ரோன் உற்பத்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தமொன்றை இறுதி செய்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஜெர்மனியுடன் ட்ரோன் ஒப்பந்தம் கைச்சாத்திடுகிறது உக்ரைன்

  • September 2, 2026
  • 0 Comments

உக்ரைன், ஜெர்மனியுடன் இணைந்து ட்ரோன் உற்பத்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தமொன்றை இறுதி செய்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜெர்மன் ஜனாதிபதி ப்ரீட்ரிச் மெர்ஸ் உடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு உக்ரைனால் முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், பல்வேறு வகையான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மென்பொருட்களை இரு நாடுகளும் இணைந்து உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. “எங்கள் குழுக்கள் ஏற்கனவே ட்ரோன் ஒப்பந்தத்தின் […]

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரியாக இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஜீதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா செய்தி

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் CEO ஆக ஜீதேந்திர மிஸ்ரா நியமனம்

  • September 2, 2026
  • 0 Comments

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரியாக இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஜீதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முழு நேர தலைமை செயல் […]

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது. இலங்கை செய்தி

22 தொடர்பான விசாரணை நிறைவு: அடுத்து என்ன?

  • September 2, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் 50 இற்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக 22 இற்கு எதிராகவே அதிக மனுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் […]