இலங்கை

7 சதவீதத்தால் உயரும் பணவீக்கம் : மத்திய வங்கி கணிப்பு!

  • June 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் தொடரும் மோதல் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக நாட்டின் பணவீக்க விகிதம் 7 சதவீதமாக  உயரக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், மத்திய கிழக்கு மோதல் குறுகிய காலத்தில் தீர்க்கப்படும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் நீடித்த தன்மை இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது […]

இலங்கை

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!! காரணம் என்ன?

  • May 19, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையே ரூபாய் சரிவடைவதற்கு முக்கிய காரணம் என மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 330 ரூபாவை கடந்துள்ள நிலையில், இது  தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நம்மைப் போலவே எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் உள்ளன. இந்த ஆண்டில் நமது ரூபா 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது, இந்திய ரூபா 6.4 சதவீதத்தினாலும், […]

இலங்கை

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி – நந்தலால் வீரசிங்க வழங்கிய உறுதிமொழி!

  • May 13, 2026
  • 0 Comments

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட மோசடி சம்பவத்தை தொடர்ந்து அவ்வாறான ஒரு சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய இலங்கை மத்திய வங்கியும் (CBSL) நிதி அமைச்சகமும் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இன்று (13) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற […]