இலங்கை

7 சதவீதத்தால் உயரும் பணவீக்கம் : மத்திய வங்கி கணிப்பு!

மத்திய கிழக்கில் தொடரும் மோதல் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக நாட்டின் பணவீக்க விகிதம் 7 சதவீதமாக  உயரக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், மத்திய கிழக்கு மோதல் குறுகிய காலத்தில் தீர்க்கப்படும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் நீடித்த தன்மை இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தம் உருவாகி வருவதாகவும், 5.4 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள பணவீக்கம், மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமைகள் தொடர்ந்தால், பணவீக்கம் 5 சதவீதத்தைத்  தாண்டி 7 சதவீதத்தை எட்டக்கூடும் என்ற அபாயம் உள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!