இலங்கை

நாளை விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்

  • April 30, 2026
  • 0 Comments

நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான கூட்டங்கள் மற்றும் பேரணிகள் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள அதேவேளை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!