அனில் ஜயந்த பெர்னாண்டோ – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு
தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (23) பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, காத்தான்குடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள், மக்களின் அடிப்படைத் தேவைகள், பொதுச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் பிரதேசத்தின் நிலையான முன்னேற்றம் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், காத்தான்குடி நகர சபையின் […]



