இலங்கை செய்தி

தியாகி பொன். சிவகுமாரன் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

தமிழின விடுதலைப் போராட்டத்தில் வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள தியாகி பொன். சிவகுமாரனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை 8 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வின் ஆரம்பத்தில், பொது ஈகைச் சுடரினை தியாகி […]

உலகம் செய்தி

உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் இஸ்ரேல்: பிரிட்டனிலும் கடும் அதிருப்தி!

  • June 5, 2026
  • 0 Comments

சர்வதேச அளவில் இஸ்ரேலின் நற்பெயர் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்படி ஆய்வில் பங்கேற்ற 36 நாடுகளில் பெரும்பாலானவற்றில், பெரும்பான்மையான மக்கள் இஸ்ரேல் குறித்து எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 8 முதல் மே 13 வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நாடுகளில் உள்ள முதியவர்களில் 67 சதவீதமானோர்பேர் இஸ்ரேல்மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வெறும் 25 சதவீதமானோரே இஸ்ரேலுக்கு ஆதரவாக […]

உலகம் செய்தி

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை கொன்றது இஸ்ரேல்!

  • June 5, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பொறியியல் பிரிவு தளபதி அப்துல் ஹர்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக வெடிபொருட்களைத் தயாரித்ததில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என இஸ்ரேல் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2006-ஆம் ஆண்டு போரிலிருந்து இவர் இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டு வந்ததாக ராணுவத் தரப்பு தெரிவிக்கிறது. எனினும், தமது தளபதியின் உயிரிழப்பு குறித்த தகவலை ஹிஸ்புல்லா அமைப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேவேளை, […]

ஐரோப்பா செய்தி

அரச குடும்ப சொத்துக்களை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிய Andrew?

  • June 5, 2026
  • 0 Comments

Prince Andrew அரசிற்குச் சொந்தமான தங்குமிடங்களை வாடகைக்கு வழங்கி வருமானம் ஈட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் Crown Estate அமைப்பிடமிருந்து குத்தகைக்கு எடுத்த ராயல் லாட்ஜ் எஸ்டேட்டில் உள்ள மூன்று வீடுகளே வாடகைக்கு விடப்பட்டு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் (NAO) அறிக்கையில்மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. எனினும்,வாடகைத் தொகை எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், மன்னர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வப் பணிகளில் ஈடுபடாத  ஆண்ட்ரூவின் மகள்களான Princess Eugenie […]

இலங்கை செய்தி

யாழில் சுகாதார தொண்டர்கள் நீதிகோரி போராட்டம்!

  • June 5, 2026
  • 0 Comments

யாழ். போதனா வைத்தியசாலையில் பல வருடங்களாக சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வருபவர்கள், இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர். நியமனம் வழங்கலுக்கான நேர்முகத் தேர்வில் தம்மை உள்வாங்காது அநுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளை (6) நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வை இடை நிறுத்தி தமக்கான வாய்ப்பை வழங்கவேண்டும் எனக் கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வடக்கு மாகாண ஆழுநளுனர் அலுவலகம் வரை சென்று, மதியம் வரை நீடித்தது. “ நாம் கடந்த […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

புதிய கட்சி அடுத்த தேர்தலில் களமிறங்கும்: அண்ணாமலை அறிவிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகரியான அண்ணாமலை, பாஜக ஊடாக தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தார். பாஜக தமிழக தலைவராகவும் பதவி வகித்தார். அண்மையில் பாஜக தமிழக தலைவராக புதியவர் நியமிக்கப்பட்டார். இதனால் சட்டசபைத் தேர்தலில்கூட அண்ணாமலை போட்டியிடவில்லை. பாஜகவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் வழங்கி இருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக இன்று […]

செய்தி விளையாட்டு

FIFA World Cup 2026: தொடக்க விழாவில் Shakiraவின் இசை விருந்து!

  • June 5, 2026
  • 0 Comments

கொலம்பியாவின் பிரபல பாப் இசை நட்சத்திரமான ஷகீரா (Shakira), 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காகத் தான் பாடியுள்ள அதிகாரப்பூர்வ பாடலை மெக்சிகோவில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மேடையேற்றவுள்ளார். மெக்சிகோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற Estadio Azteca மைதானத்தில் ஜூன் 11, வியாழக்கிழமை தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் நைஜீரியப் பாடகர் Burna Boy உடன் இணைந்து ஷகீரா Dai Dai பாடலைப் பாடவுள்ளார். இந்தத் தொடக்க விழாவைத் தொடர்ந்து, உலகக் கோப்பைத் தொடரின் ஒட்டுமொத்த 104 […]

அரசியல் இலங்கை செய்தி

இனி அரசியலுக்கு வரமாட்டேன்: அலி சப்ரி உறுதி!

  • June 5, 2026
  • 0 Comments

தான் இனி ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எவ்வளவு கோரிக்கைகள் வந்தாலும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையா என கேள்வி எழுப்பட்டது. “ இல்லை. அரசியலுக்கு வருவதற்கு எதிர்பார்க்கவில்லை.” என அலிசப்ரி பதிலளித்தார். அதேவேளை, தான் அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியதாகவும் குறித்த நேர்காணலில் அலிசப்ரி குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர், அலி […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் கரப்பான் பூச்சிகள் பறிமுதல்!

  • June 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு வணிக இனப்பெருக்க மையத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிட்னியில் இருந்து மேற்கே 200 கி.மீ தொலைவில் உள்ள Bathurst என்ற இடத்திலேயே குறித்த நிலையம் அமைந்துள்ளது. மடகாஸ்கர் ஹிஸ்ஸிங் Madagascar hissing மற்றும் துபியா Dubia போன்ற சட்டவிரோத இனங்களைச் சேர்ந்த இவை, இரண்டு லட்சம் டாலர்கள் ஆஸ்திரேலிய பெறுமதி கொண்டவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு இனங்களையும் ஆஸ்திரேலியாவிற்குள் சட்டப்பூர்வமாக […]

உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தது ஹிஸ்புல்லா: படைகளை வாபஸ்பெற இஸ்ரேல் மறுப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

லெபனானில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க தலையீட்டுடன் முன்வைக்கப்பட்ட புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துள்ளது. இந்நிலையில் லெபனானில் இருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று இஸ்ரேலும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுடன் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தையும் மேற்கொள்வதற்கு லெபனானில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை ஈரான் ஒரு முக்கிய நிபந்தனையாக விதித்துள்ளது. மேலும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், தான் நேரடியாகப் போரில் […]