உலகம் செய்தி

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை கொன்றது இஸ்ரேல்!

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பொறியியல் பிரிவு தளபதி அப்துல் ஹர்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக வெடிபொருட்களைத் தயாரித்ததில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என இஸ்ரேல் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.

2006-ஆம் ஆண்டு போரிலிருந்து இவர் இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டு வந்ததாக ராணுவத் தரப்பு தெரிவிக்கிறது.

எனினும், தமது தளபதியின் உயிரிழப்பு குறித்த தகவலை ஹிஸ்புல்லா அமைப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அதேவேளை, இஸ்ரேலிய விமானப்படை ஹிஸ்புல்லாவின் ஏவுகணை ஏவுதளத்தை தாக்கி அழித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி