ரஷ்யாவின் கோரத் தாண்டவம் – வான்வெளியை பாதுகாக்க போர் விமானங்களை அனுப்பிய போலந்து
ரஷ்யா உக்ரைன் மீது நேற்று முன்னெடுத்த பாரிய தாக்குதலில் குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த தாக்குதலின்போது 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளும் 280 ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று அதிகாலை வரையிலும் கீவில் தாக்குதலுக்கான சைரன் ஒலி எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே ரஷ்யாவின் இந்த கோரத் தாண்டவத்தை தொடர்ந்து போலந்தும் தங்களது வான்வெளியை பாதுகாக்க போர் விமானங்களை பறக்கவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைகளை சுட்டிக்காட்டிய ஜெலன்ஸ்கி, வரவிருக்கும் “ஒரு பெரிய தாக்குதல்” குறித்து […]




