உலகம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர் மரணம் – பதிலடிக்கு தயாராகும் நெதன்யாகு

  • July 24, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இடம்பெற்ற வன்முறையில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து உறுதியான பதிலடி கொடுப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று உறுதி மொழிந்துள்ளார். இது தொடர்பில் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், “பயங்கரவாதிகள் மற்றும் அவர்களைத் திட்டமிட்டு ஆதரிப்பவர்களுக்கு எதிராக முழு பலத்துடன் நடவடிக்கை எடுப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். டெல் பகுதியில் இடம்பெற்ற இந்த வன்முறையில் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹவத் […]

உலகம்

இஸ்ரேலின் பொருளாதாரத்தை முடக்க திட்டம் – ஐரோப்பிய தலைவர்கள் விவாதம்

  • July 13, 2026
  • 0 Comments

இஸ்ரேலியக் குடியேற்றங்களுடனான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது தொடர்பான முன்மொழிவுகளைப் பரிசீலிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று பிரஸல்ஸில் கூடவுள்ளனர். இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவதில் ஐரோப்பிய ஆணையம் காலந்தாழ்த்துவதாக சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில் இன்று இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது தலைவர்கள் இஸ்ரேலியக் குடியேற்றங்களுடனான வர்த்தகத்தைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தடை செய்வது குறித்து விவாதிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதற்குப் […]

உலகம்

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 06 பேர் பலி

  • July 13, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.06 இந்தத் தாக்குதல்களில் 14க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சப்ரா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதுடன், அவை உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது. இருப்பினும், பின்னர் இஸ்ரேல் ஹமாஸின் ஆயுத உற்பத்தி ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக […]

உலகம்

இஸ்ரேலிய ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் பறவை மோதியதால் பரபரப்பு

  • June 26, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் பயணித்த ஹெலிகாப்டர் பறவை மோதியதால், அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இஸ்ரேலிய ஊடகங்களின்படி, ஜனாதிபதி ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் இருந்து வடக்கு இஸ்ரேலுக்குப் பயணம் செய்துகொண்டிருந்தார். இதன்போது, ​​திடீரென ஒரு பறவை அவரது ஹெலிகாப்டர் மீது மோதியது. பறவை மோதியதன் காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் இஸ்ரேலிய ஜனாதிபதி மற்றொரு ஹெலிகாப்டரில் தனது பயணத்தைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

டொனால்ட் டிரம்ப் மீது மிகுந்த கோபத்தில் இருக்கும் இஸ்ரேலிய ஊடகங்கள்

  • June 20, 2026
  • 0 Comments

ஈரான்-அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மீது இஸ்ரேலிய அரசாங்கம் மட்டுமல்ல, அதன் ஊடகங்களும் கூட மிகுந்த கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இஸ்ரேலிய ஊடகத் தொகுப்பாளர் ஒருவர், தனது வர்ணனையில், அமெரிக்க ஜனாதிபதி பெயருடன் ஹுசைன் என்பதைச் சேர்த்து, “இவர் டொனால்ட் டிரம்ப் அல்ல, டொனால்ட் ஹுசைன் டிரம்ப்” என்று கூறினார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஹுசைன் ஒபாமாவின் ஈரான் ஒப்பந்தத்தைக் கேலி செய்யும் விதமாக அவர் இந்தப் பெயரை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், […]

உலகம்

கனடா சென்றால் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு (Netanyahu) கைது செய்யப்படுவாரா?

  • October 21, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu)  கனடா (Canada)  செல்லும்போது சர்வதேச குற்றவியல் சட்டங்களுக்கு அமைய அவர் கைது செய்யப்படலாம் என கனடாவின் பிரதமர்  மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது நடவடிக்கை தொடர்பில் கனடாவின் பிரதமர் பரிசீலனை செய்ய வேண்டும் என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் கார்னி (Mark Carney)  நிச்சயமாக இதை மறுபரிசீலனை செய்து இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை (Netanyahu) கனடாவிற்கு வரவேற்க வேண்டும் என்று  இஸ்ரேலின் அரசாங்க […]

உலகம்

அமைதி ஒப்பந்தம் – ட்ரம்பிற்கு வழங்கப்படும் இஸ்ரேலின் உயரிய விருது!

  • October 13, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றி சிறப்பு அறிக்கை வெளியிட உள்ளதாக ABC ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமைதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ட்ரம்பிற்கு இஸ்ரேலின் மிக உயர்ந்த விருதும், பதக்கமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டிரம்ப் ஹமாஸ் வசமிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அவர்  இஸ்ரேலில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திற்கு வருகை தந்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, காசா அமைதி […]