உலகம்

ஐ.நாவில் ஈரான் அதிபரின் பேச்சு – அவையை விட்டு வெளியேறிய அமெரிக்க பிரதிநிதிகள்

  • September 23, 2026
  • 0 Comments

ஐ.நா. பொதுச் சபையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உரையாற்றும்போது  அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு அவையிலிருந்து வெளியேறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் எங்களை தற்காத்துக்கொண்டோம் மட்டுமே, நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல,” என்று பெசெஷ்கியன் தனது போர்கால உரையில் தெரிவித்தார். முன்னதாக நேற்றைய தினம் ட்ரம்ப் ஈரான் தொடர்பில் உரையாற்றியபோது ஈரானிய பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதற்கமைய பெசெஷ்கியனின் உரை ஆரம்பித்தபோதே அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.