2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த கத்தார், இந்தியா உட்பட 7 நாடுகள் போட்டி
2036 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான கத்தாரின் விண்ணப்பத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) உறுதி செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான பந்தயத்தில் இந்தியா உட்பட மொத்தம் 7 நாடுகள் உள்ளதாகச் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஹங்கேரி, துருக்கி மற்றும் தென்கொரியா ஆகிய பிற நாடுகள் இந்த அதிகாரப்பூர்வப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பிற நாடுகள் இப்போட்டியை நடத்தத் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வரும் அக்டோபர் 31-ஆம் திகதிவரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கத்தார் […]













